தன் முதல் மனைவி மறைவுக்கு பின் பாக்யராஜ் செய்த விஷயம்.. வெளிவந்த பல ரகசியங்கள்
Bhagyaraj
By Dhiviyarajan
நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என்று பல பன்முகங்களை கொண்டவர் தான் பாக்யராஜ். இவரின் மகன் சாந்தனுவும் சினிமாவில் நடித்து வருகிறார்.
பாக்யராஜ் பிரபல நடிகை பிரவீணாவை 1981 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக பிரவீணா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு 1983 -ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனைவியின் இழப்பால் சோகத்தில் மூழ்கி இருந்து பாக்யராஜ் சில வருடங்கள் கழித்து நடிகை பூர்ணிமாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
பாக்யராஜ்க்கு இரண்டாம் திருமணம் ஆனாலும் முதல் மனைவி கொடுத்த மோதிரத்தை தற்போது கையில் அணிந்திருக்கிறார். மேலும் இவர் முதல் மனைவியின் புகைப்படத்தை தனது அலுவலகத்தில் வைத்துள்ளார்.