நான் ஏன் அவரை பார்க்கணும்? பாக்யராஜிற்கு இளையராஜா மீது இவ்வளவு கோபம் ஏன்?
தமிழில் ஜாம்பவான் இயக்குனராக இருந்த பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்து பின் தனக்கென பல முகங்களை கொண்டு தமிழ் சினிமாவில் வியந்து பார்க்க வைத்த இயக்குனராக திகழ்ந்தவர் கே பாக்யராஜ்.
சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் மட்டும் இல்லாமல் பத்திரிக்கையாளர், வசனகர்த்தா, திரைக்கதை அமைப்பாளர் என பன்முகத்திறமைக்கொண்டு விளங்கியவர். தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபத்திரத்தில் நடித்து வருகிறார் சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்து இளையராஜா பற்றிய சண்டைகளை கூறியுள்ளார்.
சின்னவீடு படத்தின் போது இளையராஜா தான் இசை. ஸ்க்ரிப்ட் ரெடி செய்தபின் கூறுங்கள் பாடல் பண்ணுவோம் என்று இளையராஜா கூறுவார். அப்படி ஸ்க்ரிப்ட் செய்துவிட்டு ஆபிஸிற்கு சென்றேன்.
அங்கிருந்தவர்கள் அவரை பார்க்க அவர் வீட்டிற்கு போக கூறினார்கள். நான் ஏன் இளையராஜா வீட்டிற்கு சென்று பாக்கணும் என கேட்டேன். அங்கு தான் பார்க்க வர சொன்னதாக கூறினார்கள்.
அதன்பின் அவரை சந்திக்காமல் சென்று நானே டியூன் போட்டு பாடலை இசையமைந்த்தேன் என்று கூறியுள்ளார். இதன் பின் இளையராஜா கவிஞர் வாளியிடம் இதுபற்றி கேட்டுள்ளாராம்.