சொந்த மகன் வாழ்க்கைக்கே சூனியம் வைத்த பாக்யராஜ்!! கடுப்பாகிய சாந்தனு..
80-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தும் இயக்கியும் இருந்தவர் இயக்குனர் கே பாக்யராஜ். தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் பாக்யராஜ் தன் மகன் சாந்தனுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால் சரியான ஒரு இடத்தினை பிடிக்காமல் கஷ்டப்பட்டும் வருகிறார் சாந்தனு. மகனின் கால்ஷீட் மற்றும் கதை விசயத்தில் பாக்யராஜ் ஆரம்பத்தில் பார்த்து வந்துள்ளார்.
அப்படி சாந்தனுக்கு வந்த ஒரு வாய்ப்பினை மறுத்து கேரியரை தொலைக்க காரணமாய் இருந்துள்ளார் பாக்யராஜ்.
சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் ரோலில் நடிக்க சசி குமார் நினைத்து கதையை பாக்யராஜிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் கதை பாக்யராஜிற்கு பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார். அதன்பின் தான் ஜெய் அப்படத்தில் நடித்துள்ளார்.
அப்படத்தில் சாந்தனு மட்டும் நடித்திருந்தால் அவரது கேரியர் வேறு ஒரு இடத்திற்கு சென்றிருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.