5 வருஷமா இளையராஜாவிடம் எடுபுடி வேலை!! இசைஞானியின் உண்மை முகத்தை உடைத்த இசையமைப்பாளர்..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் சிறந்த இசையமைப்பாளராக வளர்ந்து பிரபலமானவர் இசையமைப்பாளர் பரணி. பெரியண்ணா படத்தில் ஆரம்பித்த இசை வாழ்க்கையில் நாம் அறிந்திராத பல படங்களுக்கு இசையமைத்து கொடுத்தவர் பரணி.
கிட்டத்தட்ட 30 படங்களுக்கு இசையமைத்து கொடுத்த பரணி, சமீபத்தில் பேட்டியொன்றில் தான் வளராததற்கு என்ன காரணம் இளையாராஜா என்னை எப்படி நடத்தினார் என்று கூறியிருக்கிறார். சினிமாவில் யார் உங்களை காணாமல் ஆக்குனது என்ற கேள்விக்கு, சினிமாவில் நல்ல பண்றான்னு சொன்னா யார் வாய்ப்பு கொடுக்குறாங்க என்று கூறியிருக்கிறார் பரணி.
இளையராஜா என் குரு இல்லை, ஏ ஆர் ரகுமான் சொல்வது போல், எனக்கு மாஸ்டர். இளையராஜா எனக்கு என்ன வாய்ப்பு கொடுத்தார். அங்க இருந்தேன், எடுபுடி வேலை பார்த்து 5 வருடம் இருந்தேன். இளையராஜாவிடம் பேச சென்ற போது யார் நீ-ன்னு கேட்டார்.
இளையராஜாவின் மச்சான் சசி, என்னை வைத்து ஐய்யப்பன் பாடலை எழுதினேன். சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலை பார்த்து ராஜா சார் சிரித்தார் என்று பரணி தெரிவித்துள்ளார்.
5 வருடத்தில் இளையராஜாவிடம் இருந்ததுக்கு எம் எஸ் வி-யுடன் இருந்திருக்கலாம் என்று நெறியாளர் கேட்டார். அவரை பார்த்தேன் என்னை மரியாதையுடன் நடத்தினார். ரகுமானிடமும் சென்றிருக்கிறேன், ரோஜா படத்தின் போது பார்த்து என்னை விசாரித்தார். இளையராஜா, மனிதர்களுக்கு நல்லது பண்ணது இல்லை, கடவுளுக்கு கோவில்களுக்கு பண்ணினார்.
எனக்கு குரு எஸ் ஏ சந்திரசேகர் தான், அவர் தான் என்னை அறிமுகப்படுத்தினார், வளர்த்துவிட்டவர் என பரணி தெரிவித்துள்ளார். இளையராஜாவால் கற்றுக்கொடுத்து வளர்ந்தவர்கள் யாரும் இல்லை, அப்படி இருந்திருந்தால் பல மேதைகள் வந்திருக்கலாம் என்று நெறியாளர் முக்தர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ரஜினிக்கு ராஜாவுக்கு இடையில் பிரச்சனைக்கு காரணம், இருவரும் பேசிக்கொள்ளும் போது, அவருக்கென்ன (இளையராஜா) கார், கம்போஸ் பண்ற எடம் எல்லாம் ஏசி, நாம தான் வெயில்ல நடிக்கிறோம் என்று ரஜினி சொல்லியதால் இளையராஜா, ரஜினியிடம் ஆர்மோனியம் பெட்டியை கொடுத்து அவரை மியூசிக் பண்ண சொல்லுங்கன்னு சொன்னாராம்.