பாரதி வெண்பாவிற்கு திருமணம்.. ஒரு வழியா பாரதி கண்ணம்மாக்கு எண்டு கார்டு போட்டாச்சு

Bharathi Kannamma Vijay Television Serials
By Karthick Raja Oct 16, 2022 11:15 AM GMT
Report
105 Shares

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முடிந்தது

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. சில வருடங்கள் நன்றாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் அதன்படி அனைவரும் Cringe என்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டது.

எப்படா இந்த சீரியலுக்கு ஒரு எண்டு கார்டு வரும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து மீம் கூட போட்டு வந்தார்கள். இந்நிலையில், அடுத்த வாரத்துடன் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மாவின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் தற்போது நடைபெறுகிறது.

வெண்பா - பாரதி திருமண ஏற்பாடு நடக்கும் இடத்தில் தான் பாரதி கண்ணம்மாவின் சீரியல் கிளைமாக்ஸ் இருக்கும் என தெரிவிக்கின்றனர். கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் வில்லி வெண்பா, ஹீரோயின் வினுஷா ஆகியோர் எடுத்த புகைபடங்களை, ரீல்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ பாருங்க 

பாரதி வெண்பாவிற்கு திருமணம்.. ஒரு வழியா பாரதி கண்ணம்மாக்கு எண்டு கார்டு போட்டாச்சு | Bharathi Kannama Serial End Episode