முகத்தில் தீக்காயத்துடன் வெண்பா!! அடையாளம் தெரியாமல் மாறிப்போன பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா..
Bharathi Kannamma
Star Vijay
Serials
Farina Azad
By Edward
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.
பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா புது கதைக்களத்துடன் இரண்டாம் சீசனை ஒளிப்பரப்பு செய்து வருகிறது.
முதல் சீசனில் வந்த கதாநாயகனை தவிர கதாநாயகி, அம்மா ரோலில் நடித்தவர்கள் சிலர் நடித்து வருகிறார்.
அதில் வெண்பாவும் தன் கதாபாத்திரத்தை தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் தீவிபத்தில் சிக்கிய வெண்பாவின் பாதி முகம் தீக்காயத்தால் பாதிப்படைந்து முகம் மாறியிருக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த குடும்பம் உட்பட வெண்பாவும் மன வேதனையில் கதறுகிறார். வெண்பாவாக நடித்து வரும் சீரியல் நடிகை அந்த காட்சிக்காக தன் முகத்தை மாற்றிய வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.