இனிமேல் கண்ணம்மாவாக என்னால் முடியாது! பிரபல சீரியலை தூக்கி எறிந்த நடிகை.. அவருக்கு பதில்...
தொலைக்காட்சி தொடரில் நல்ல வரவேற்பு பெற்று டி ஆர் பியில் பெரிய இடத்தை பிடிக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இரட்டை பெண் குழந்தைகளை வைத்து நகரும் இந்த தொடரில் ஏற்கனவே அகிலன் ரோலில் நடித்தவர் மாறியிருந்தார். பின் வெண்பா கர்ப்பமாக இருப்பதால் தற்காலிக நடிகையை நடிக்க வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன், தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து இவர் விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி தற்போது ஷாக்காகியுள்ளனர். அவருக்கு பதில் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை நட்சத்திரா கதாநாயகியாக கமிட் செய்துள்ளனர்.
யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலாவாக நடித்த நட்சத்திராவிற்கு ஏற்கனவே ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பதால் கண்ணம்மாவாக நடிக்க ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என கூறிவருகிறார்கள்.
