மாயாண்டி சார் ரிடர்ன்ஸ்! பாரதி கண்ணம்மாவில் வெண்பாவுடன் இணைந்த அடுத்த வில்லன்..
தமிழ் தொலைக்காட்சியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. விவாகரத்து நோட்டில் கொடுத்த பாரதியால் தற்போது கண்ணம்மா என்ன செய்வதறியாது அவரின் மாமியார் மாமனாரிடம் சென்று ஹேமாவை கூட்டிச்சென்று விடுவேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து வெண்பாவிடம் பாரதி டிவோர்ஸ் கொடுத்துள்ளதை கூறியதும் மகிழ்ச்சியில் ஆழ்கிறார்.
இந்நிலையில் வெண்பா சில நாட்களில் குழந்தை பிறக்க போகும் காலம் என்பதால், ஜெயிலில் இருப்பது போன்ற காட்சிகள் அமைந்து வருகிறது. சீக்கிரமே அவரின் கதாபாத்திரத்தை இயக்குநர் ஒதுக்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது. அப்படி இருந்தாலும் வெண்பாவிற்கு பதில் ஒரு வில்லன் கதையில் வரவேண்டும் என்பதற்காக கண்ணம்மாவின் மாமாவான மாயண்டியை கொண்டு வருவார்களோ என்று சிலர் கேள்விக எழுப்பியுள்ளனர்.
கண்ணம்மா வீட்டில் சண்டை போட்டுவிட்டு ஜெயிலுக்கு போனவர் மாயாண்டி. தற்போது மாயாண்டியை மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க வைப்பார்கள் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலில் இருந்து வெளியே வந்து வெண்பாவை சந்திக்க செல்வது, வெண்பா ஜெயிலில் இருக்கிறார் என்று சாந்தி வேலைக்காரி அவரிடம் கூற பழி வாங்குதல் தொடர்வது போன்று காண்பிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
அப்படி மாயாண்டி வந்தால் அவரை மட்டும் காமித்துவிட்டு வெண்பாவை மறைத்து கொஞ்ச நாள் ஓய்விற்கு பிறகும், குழந்தை பெற்றப்பின்னும் சில மாதங்களில் வரும் போதும் கதையை வேறுமாதிரி கொண்டு செல்லலாம் என இழுப்பார்கள்.