ஹேமாவை பார்த்து கொஞ்சும் கண்ணம்மா! பாரதி சீரியலில் நடக்க இருப்பது இதுதானா?
serial
television
bharathikannamma
By Edward
தொலைக்காட்சி தொடர்களில் தற்போது டிஆர்பியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை வைத்து பல மீம்ஸ்கள் கேலி செய்யும் விதமாக நெட்டிசன்கள் இடையே டிரண்ட்டாகி வந்தது. பின் கதை வேறு ஒரு பக்கம் செல்ல சீரியலில் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு அதிகரித்தது.\
தற்போது கண்ணம்மாவிற்கு ஹேமா தான் தன் மகள் என்று தெரிந்த பின் கதறி அழும் வீடியோ வெளியாகி பெரியளவில் வைரலானது. தற்போது கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு சென்று ஹேமாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்து கதறி அழுதுள்ள வீடியோ சீரியல் குழு வெளியிட்டுள்ளது.