பெத்த அம்மாவால் அவமானத்தின் உச்சிக்கே செல்லும் வெண்பா! கிழித்து தொங்கவிட்ட ரேகாவின் நடிப்பு..

Bharathi Kannamma
By Edward Apr 21, 2022 06:45 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் புதுபுது திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது.

கண்ண்ம்மாவை எப்படியாவது சாய்த்துவிட வேண்டும் என்ற பிளானுடன் இருக்கும் வெண்பாவிற்கு தன்னுடைய அம்மாவால் பிரச்சனைக்கும் மேல் பிரச்சனையை சந்தித்து வருகிறார்.

மோசடி வழக்கில் ஜாமினில் வெளி வந்த வெண்பா வெளியில் இருக்க கூடாது என்று போலிசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு வந்த வெண்பாவின் அம்மா ரேகா, பாரதியை மறந்துவிட்டு நான் சொல்லும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்ய வேண்டும் அப்படி இருந்தால் தான் நான் உன்னை காப்பாற்றுவேன் என்று ஸ்டாங்காக கூறி சென்றுள்ளார்.

இதனால் தன்னுடைய அம்மாவே இப்படி எனக்கு எதிரியாக இருக்காங்களே என்று வெண்பா அவமானத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

வெண்பாவின் அம்மாவுக்கும் கண்ணம்மாவிற்கும் தேவையில்லாத வாக்குவாதமும் உரசலும் இருக்கும் நிலையில் வெண்பா அவளுடைய அம்மாவை தூண்டிவிட்டு கண்ணம்மாவை பழி வாங்குவதற்காகவே பாரதியை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது.