விஷாலுக்கு குரல் கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்.. யாருனு தெரியுமா
serial
vishal
bharathi kannama
senthil kumari
avan ivan
By Kathick
இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான படம் அவன் இவன்.
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தில் நடிகர் விஷால் சில காட்சிகளில் பெண் வேடம் அணிந்து நடித்திருந்தார்.
இந்நிலையில், விஷால் பெண் வேடமிட்டு நடித்திருந்த போது, அவருக்கு குரல் கொடுத்தது பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை செந்தில் குமாரி தானாம்.
நடிகை செந்தில் குமாரி பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியின் அம்மாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் சீரியலில் மட்டுமின்றி மெர்சல், பசங்க, சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.