43 வயதில் 3 மாதம் கோமா! மரணமடைந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி
Bharathi Kannamma
Serials
By Edward
பாரத் கல்யாணின் மனைவி மரணம்
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் மருத்துவராக நடித்து வரும் நடிகர் பாரத் கல்யாணின் மனைவி திடிரென மரணம்.
90ஸ் காலக்கட்டத்தில் இருந்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகராக திகழ்ந்து வந்தார் பாரத் கல்யாண்.
பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் தற்போது நடித்து வரும் பாரத் கல்யாண் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து இரு பிள்ளைகளை பெற்றிருந்தனர்.
போலியோ டயட்
இந்நிலையில் 43 வயதான பிரியா திடீரென மரணமடைந்தது சின்னத்திரை வட்டாரத்தை அதிரவைத்துள்ளது. பிரியா போலியோ டயட்டை மேற்கொண்டு வந்துள்ளார்.
அதனால் சர்க்கரை நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நல குறைவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார். 3 மாதங்களாக கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்துள்ளார்.