பாரதிராஜா மகன் மனோஜின் கடைசி நிமிடம்!! நேரில் பார்த்த மனைவியின் நிலைமை...

Manoj Bharathiraja Bharathiraja Death
By Edward Apr 06, 2025 04:15 PM GMT
Report

பாரதிராஜாவின் மகன் மனோஜ்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த விஷயம் தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாகியது. தன் மகன் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இன்றும் அதில் இருந்து மீண்டு வராமல் இருக்கிறார் பாரதிராஜா.

பாரதிராஜா மகன் மனோஜின் கடைசி நிமிடம்!! நேரில் பார்த்த மனைவியின் நிலைமை... | Bharathiraja Brother Emotional Manoj Wife Nandhana

மனைவி நந்தனா

அவர் ஒருபக்கம் இருக்க மற்றொருபக்கம் மனோஜின் மனைவி நந்தனாவும் பெரிய சோகத்தில் இருக்கிறார். இப்படியொரு நிலையில் பாரதிராஜாவின் சகோதரர் அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், வீட்டில் மாலை நேரத்தில் பப்பாளி பழம் சாப்பிட்டார். அதன்பின் அவரது மனைவியிடம் டீ கேட்டிருக்கிறார். உடனே அவரின் மனைவியும் அடுப்பறைக்கு சென்று டீ போட்டு வந்திருக்கிறார். அந்த சமயத்தில் எனக்கு என்னமோ செய்யுது என்று சொல்லியபடியே மனோஜ் உயிரை விட்டிருக்கிறார்.

பாரதிராஜா மகன் மனோஜின் கடைசி நிமிடம்!! நேரில் பார்த்த மனைவியின் நிலைமை... | Bharathiraja Brother Emotional Manoj Wife Nandhana

இதை கேள்விப்படும் நமக்கே இப்படி இருக்கிறதே, தன் கணவரின் மரணத்தை நேரில் பார்த்த நந்தனாவின் நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்க, பெரிய கொடுமை. தன் கணவரின் மரணத்தை நேரில் பார்த்தபோது அவர் எப்படி துடித்துடித்து போயிருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.