கேட்பாரற்று ஹாஸ்பிடல் செலவுக்கு கூட பணமில்லையா? பாரதிராஜாவுக்கு வந்த நிலை...

Bharathiraja
By Parthiban.A Sep 09, 2022 05:30 PM GMT
Report

இயக்குனர் பாரதிராஜா ஹாஸ்பிடலில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவ செலவுக்கு பணம் இல்லை என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வருகிறது.

பண உதவி செய்ய உறவினர்கள்யாரும் முன்வராததால் ஒரு பிரபல அரசியல் கட்சி தலைவர் செலவை ஏற்றுக்கொண்டார் என செய்தி பரவியது.

ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை என பாரதிராஜாவின் மகன் மனோஜ் தெரிவித்து உள்ளார். தான் அப்பாவின் மருத்துவ செலவை செய்து வருகிறேன் என கூறி இருக்கிறார்.

பாரதிராஜா பூரண குணம் பெற்று தற்போது வீடு திரும்புவதாகவும் அவர் கூறி இருக்கிறார். 

கேட்பாரற்று ஹாஸ்பிடல் செலவுக்கு கூட பணமில்லையா? பாரதிராஜாவுக்கு வந்த நிலை... | Bharathiraja Has No Money For Hospital Treatment