R எழுத்து நடிகைகள்!! பாரதிராஜாவின் ராசியில்லா ஹீரோ இவரா? பிரபலம்..
பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா அளித்த பேட்டியொன்றில், 16 வயதினிலே, டீன் ஏஜ் பருவ மாற்றங்களை மையமாக வைத்து பாரதிராஜா எடுத்தார். இளம் பெண்ணுக்கு ஏற்படக்கூடிய மன தடுமாற்றங்கள், பருவ கோளாறுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

இப்படி அவர் எடுத்த படங்கள் மன்வாசனை மாறாது கிராமத்திற்கே சென்று படங்களை எடுத்து வந்தார். பாரதிராஜா அறிமுகப்படுத்திய ஹீரோக்கள் பெரியளவில் ஜெயிப்பதில்லை என்ற ஒரு சென்டிமென்ட் பேச்சு இருக்கு, ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
R எழுத்து நடிகைகள்
காரணம், பாக்யராஜ் ஹீரோவாகவும் இயக்குநராகவும் ஜொலித்தார். சத்யராஜ் போன்றோர் இவரிடமிருந்து வந்து பெரியளவில் ஜெயித்தனர்.
பாரதிராஜா அறிமுகப்படுத்தும் நாயகிகளின் பெயர்கள் R என்ற எழுத்தில் தொடங்கும், ராதிகா, ரேவதி, ராதா, ரேகா என்று இருக்கும். இது ஒருவகை சென்டிமென்ட் காரணமாக இருக்கலாம், மணிரத்னம், மணிவண்ணன் போன்ற பல லெஜண்ட் இயக்குநர்கள் இவரது பயிற்சிப்பட்டறையில் இருந்து வந்தவர்கள்.

மகன் மனோஜை தாஜ்மஹால் படத்தின் மூலம் பெரிய ஹீரோவாக்க கொண்டு வர ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது.
உடல்நலம்
பாரதிராஜா ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. தான் எதிர்பார்த்த நடிப்பு வரும் வரை நடிகர்களை விடமாட்டார். சில நேரங்களில் நடிகர், நடிகைகளை கன்னத்தில் அறைந்தும் வேலை வாங்குவார்.
பாரதிராஜா பற்றிப்பேச ஒருநாள் போதாது. அவர் ஒரு நடமாடும் சினிமா பல்கலைக்கழகம், அவர் விரைவில் உடல்நலம் தேறி வரவேண்டும் என்பதே அனைவரது விருப்பம் என்று பகிர்ந்துள்ளார்.