பிரியங்கா காந்தியின் மருமகள் இவர்தானா!! வைரலாகும் மணமகள் புகைப்படங்கள்..
பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் மகனுக்கும் டெல்லியை சேர்ந்த புகைப்படக் கலைஞருக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் வதேராவும் டெல்லியை சேர்ந்த புகைப்பட கலைஞர் அவிவா பைக்கும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள ராந்தபோரில் இரு வீட்டார் முன்னிலையில் புதன்கிழமை பிரமாண்டமாக நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில மாதங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறார்கள்.
மருமகள் அவிவா பைக்
தற்போது பிரியங்கா காந்தியின் மருமகள் அவிவா பைக் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவிவா பைக்கின் தந்தை இம்ரான் பைக் தொழிலதிபராக இருக்கிறார்.
தாய் நந்திதா பைக் கட்ட உட்புற வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். ரெய்ஹான் மற்றும் அவிவா இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர்.
டெல்லியில் படிக்கும் போதில் இருந்து இருவருக்கும் நட்பு மலர்ந்துள்ளது. கலை, புகைப்படம் எடுத்தல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆகியவற்றில் இருவருக்கும் இருக்கும் பொதுவான ஆர்வம் இவர்களை இன்னும் நெருக்கமாக்கியது. பல ஆண்டுகளாக இருவரும் நட்பாக இருந்து தற்போது திருமணம் செய்யவுள்ளார்களாம்.
