Love Failure-ஆகி மனக்கஷ்டத்தில் இருந்தேன்.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை பாவனா
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பாவனா. இதன்பின் ஜெயம்கொண்டான், தீபாவளி, வாழ்த்துக்கள், வெயில், அசல் என தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார்.

ஆனால், அசல் திரைப்படத்திற்கு பின் இவர் தமிழில் படங்கள் எதுவும் நடிக்கவில்லை.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, "அசல் படம் தான் தமிழில் எனது கடைசி திரைப்படம் என்று நான் நினைக்கவில்லை, தமிழில் ஏன் எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றும் தெரியவில்லை" என கூறியிருந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது, "நான் Love Failure-ஆகி கொஞ்சம் மனக்கஷ்டத்தில் இருந்தேன், அந்த நேரத்தில் தான் நான் அவரை சந்தித்தேன்.
ரெண்டு பேரும் நண்பர்களாக பழகும்போது அவருக்கும் காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது தெரிந்தது. இதனால் இரண்டு பேருக்கும் செட் ஆச்சு, கல்யாணம் செய்தோம்" என கூறியுள்ளார்.