திருமணமாகாமல் 40 வயதில் கர்ப்பமான நடிகை!! 8 மாதத்தில் நடந்த சோகம்..
பாவனா ராமண்ணா
1996ல் கன்னட சினிமாவில் கால்பதித்து, பல திரைப்படங்களில் நடித்தும் 1997 வெளியான சந்திரமுகி பிரனாக்ஷி என்ற கன்னட படத்தில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை பாவனா ராமண்ணா.
தமிழில் மோகன் நடிப்பில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் அறிமுகமாகி பிரசாந்தின் விரும்புகிறேன், நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பாவனா பரதநாட்டியம் டான்சர் என்பதால் அரசின் திரை விருதை மூன்றுமுறை வென்றிருக்கிறார்.
தற்போது 40 வாதாகும் பாவனா ராமண்ணாவுக்கு இதுவரை திருமணமாகவில்லை. இருந்தாலும் தாய்மை மீதும், குழந்தைகள் பெற்றுக்கொள்வதிலும் ஆசை ஏற்பட்டு ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தார்.
இரட்டை குழந்தை
திருமணம் ஆகாததால் முதலில் இவரின் ஆசையை நிறைவேற்ற எந்த மருத்துவர்களும் முன்வரவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பின் அவருக்கு ஐவிஎஃப் சிகிச்சை அளிக்க மருத்துவர் ஒருவர் முன்வர, இரட்டை குழந்தைகளை சுமந்தார். அண்மையில் தான் கருவுற்றிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, இது ஒரு புதிய அத்தியாயம், என் 20 மற்றும் 30களில் தாய்மை பற்றி என் மனதில் எந்த எண்ணமும் இல்லை, ஆனால் 40 வயதாகும்போது தான் அந்த ஆசை வந்தது.
பல மருத்துவமனைகள் அதை நிராகரித்தன. பல முயற்சிகளுக்கு பின் டாக்டர் ச்ஷ்மா என் ஆசையை புரிந்து கொண்டு, ஐவிஎஃப் சிகிச்சை அளித்ததால் தற்போது கருவுற்றேன். இதற்கு என் தந்தை, உடன்பிறந்தவர்கள், அன்புக்குரியவர்கள், பெருமையுடனும் அன்புடனும் என்னுடன் துணை நிற்கிறார்கள். ஆனால் சிலர் என் விருப்பத்தை கேள்வி எழுப்பினர்.
என் குழந்தைகளுக்கு அப்பா இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் கலை, இசை, கலாச்சாரம் மற்றும் நிபந்தனையற்ற அன்பு நிறைந்த வீட்டில் வளர்வார்கள். கலகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை நான் விரும்பவில்லை. விரைவில் இரண்டு சிறிய ஆன்மாக்கள் என்னை அம்மா என்று கூப்பிடுவார்கள். அதுதான் எல்லாமே, அது போதும் என்று உருக்கமாக பேசியிருந்தார் பாவனா.
இறந்து பிறந்த குழந்தை
தற்போது பாவனா ராமண்ணாவுக்கு இரட்டை பெண் குழந்த பிறந்துள்ளது. ஆனால் இரட்டை பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து பிறந்துள்ளது. ஏழு மாத கர்பிணியாக இருந்தபோது அவருக்கு உடல்நல பிரச்சனை வந்ததால் கருவிலேயே இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் 8 மாதத்தில் முன்கூட்டியே பிரசவம் ஆனநிலையில் துரதிர்ஷ்டவசமாக இரட்டை பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்துபிறந்துள்ளது. ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்திருக்கிறது. வேதனையான இந்த சம்பவத்தின்போது மகிழ்ச்சிக்குரிய செய்தி பாவனாவும் அவரது உயிருடன் இருக்கும் பெண் குழந்தையும் தற்போது ஆரோக்கியமாகவும் நன்றாக இருப்பதாகவும் ஊடகத்தில் செய்திகள் வெளியானது.