அன்று விமர்சனத்தால் பாதிக்கப்பட்டவர்!! இப்போ தமிழில் பிரபல நடிகையாக ஜொலிக்கிறார்...
Tamil Actress
Actress
By Edward
பவ்யா திரிகா
தமிழில் கதிர், ஜின், ஜோ, இடி மின்னால் காதல், பன் பட்டர் ஜாம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவ்யா திரிகா. சென்னையை சேர்ந்த பவ்யா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன்னுடைய பலம், பலவீனம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், என்னுடைய பலம் நிறைய இருக்கிறது, அதேபோல் பலவீனமும் அதிகமாக இருக்கிறது, அதை வெளியில் சொல்லக்கூடாது. என்னுடைய வாழ்க்கையில் நிறைய விமர்சனங்களை பார்த்துவிட்டேன், ஆனாலும் விமர்சனங்களை கண்டு வருத்தம் கொண்டதில்லை.
ஒருத்தன் வளர்கிறார்ன் என்றால் அதற்கு காரணம் விமர்சனங்களாகவே இருக்கும். என்னைப்பற்றி எனக்கு தெரியும் என்பதால், எதுவும் என் மனதை பாதித்தது கிடையாது.

பணத்துக்காக, புகழுக்காக சினிமாவிற்கு வரவில்லை, சினிமா எனக்கு ஒரு வேள்வி மாதிரி, தவம் போல என்று கூறியிருக்கிறார் பவ்யா திரிகா.