நம்பி ஏமாந்த பாரதிராஜாவின் மானத்தை காப்பாற்றிய மணிவண்ணன்! பரிசாக கிடைத்த உறவுக்காரப் பெண்..

Tamil Cinema
By Edward May 06, 2022 08:15 AM GMT
Edward

Edward

Report

தன்னுடைய திறமையால் சினிமாவில் மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர்களில் ஒருவர் மணிவண்ணன். கோவையை சேர்ந்த மணிவண்ணன் இயக்குனர், கதை ஆசிரியர், நடிகர் என பல வித திறமைகளை அடக்கியவர். ஒரே கல்லூரியில் படத்த சத்யராஜுன் மணிவண்ணனும் இணைந்து நடிக்காத படங்களே கிடையாது.

அப்படி படிப்பில் ஆர்வம் இல்லாமல் கல்லூரியில் நாடகங்களில் நடித்து வந்துள்ளார். பிடித்த ஆசிரியர் ஒரு கம்யூனிஸ்ட் என்பதால் நக்சலைட் தலைவரை சந்தித்து பேசியிருக்கிறார் மணிவண்ணன். நக்சலைட்டுகளை என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் லிஸ்ட்டில் மணிவண்ணன் பெயர் முதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

பின் அவர்களின் நண்பர்களின் உதவியால் சென்னைக்கு அனுப்பட்டார். அங்கு இளையராஜாவை 100 பக்கமளவில் புகழ்ந்து தள்ளி கடிதத்தை எழுதி அனுப்பினார். பாரதிராஜாவுக்கு மணிவண்ணனை பிடித்து போக ஒரு படத்தில் வசனகர்த்தாவாக நியமிக்கப்பட்டார்.

அதுவரை வெற்றிப்படங்களை கொடுத்து வந்த பாரதிராஜாவுக்கு கெட்டபெயர் தந்தது மணிவண்ணனின் வசனம். அப்படத்தால் நண்பர்களின் கிண்டலுக்கே ஆளாகிய பாரதிராஜா மணிவண்ணனை வைத்து ஒரு படம் ஹிட் கொடுப்பேன் என்று சவால் விட்டு அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தை கொடுத்தார்.

மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் பாரதிராஜாவின் உதவி இயக்குனாராக மணிவண்ணன் பணியாற்றினார். அதன்பின் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய புரட்சி படங்களையும் மணிவண்ணன் கொடுத்தார். இதன்மூலம் பாரதிராஜா மணிவண்ணனுக்கு தன்னுடைய உறவுக்காரப்பெண்னை திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தார்.

பாரதிராஜாவின் பட்டறையில் பாக்யராஜ் மணிவண்ணன் வரிசையில் மணிவண்ணன் பட்டறையில் சுந்தர் சி, ஆர்கே செல்வமணி, சீமான், விக்ரமன் போன்ற இயக்குனர்களும் இணைந்தனர்.