நான் எண்ணற்ற துரோகங்களை சந்தித்தேன்..நடிகை புவனேஷ்வரி எமோஷனல் Speech..
தமிழ் சினிமாவில் 90களில் கிளாமர் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை புவனேஷ்வரி. தற்போது சினிமாவுக்கே முழுக்கு போட்டுவிட்டு தீவிர ஆன்மீகப் பாதையை தேர்வு செய்து ஈடுபட்டு வருகிறார். இடையில் பல சர்ச்சைகளை சந்தித்து மீண்டு வந்த புவனேஷ்வரி, தற்போது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்து வருவதுடன், தினமும் 300 ஏழை எளிய மக்களுக்கு தன் கரங்களால் அன்னதானம் வழங்கி வருகிறார்.

சமீபத்தில் பேட்டியொன்றில் கலந்து கொண்டவர் தான் பட்ட கஷ்டங்கள், ஆன்மீக பயணம் குறித்து பேசியுள்ளார்.
அதில், 15 வருடத்திற்கு முன் சினிமாவில் நடித்ததை போல் கிளாமர் ரோல்களில் நடிக்க கேட்டாலும் அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஒருகாலத்தில் குடும்பத்திற்காக நடித்தேன், ஆனால் இன்று என் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை ஆன்மீகத்திலும், மற்றவர்களுக்கு செய்யும் உதவியிலும் கண்டுவிட்டேன். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஒரு பெண் உழைக்க செல்லும்போது, அவள் இன்னும் வலிமையான பெண்ணாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
எண்ணற்ற துரோகங்களை சந்தித்தேன்
என் குடும்ப வளர்ப்பும் நான் சந்தித்த கசப்பான அனுபவங்களும் தான் என்னை இவ்வளவு வலிமையான பெண்ணாக மாற்றியது. என் வாழ்வில் நான் எண்ணற்ற தூரோகங்களை சந்தித்துவிட்டேன். பிறரை ஏமாற்றுபவர்கள், அதனால் ஏற்படும் வலியை உடனடியாக புரிந்து கொள்வதில்லை. ஒருநாள் அவர்களும் அதேபோல் ஏமாற்றப்பட்டு அந்த வலியை உணரும் போதுதான் தாம் செய்த தவறு புரியும்.

என் மகனை வளர்ப்பது எனக்கு சுலபமான காரியமாக இருக்கவில்லை, ஆனால் நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் என் மகன் நேரில் பார்த்தே வளர்ந்தவன் என்பதால், ஊடகங்களில் என்னைப்பற்றி வரும் வதந்திகள், செய்திகளை அவன் ஒருபோதும் தவறாக எடுத்துக் கொண்டது இல்லை. பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன், நூறு முறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். குடும்பத்திற்காக வெறும் பணத்தை சம்பாதித்து கொடுப்பது மட்டும் வாழ்க்கை அல்ல.
அன்பையும் அக்கறையையும் முழுமையாக கொடுக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிதலோடு வாழும்போதுதான் வாழ்க்கை இனிமையாகும் என்று எமோஷனாலாக பேசியுள்ளார் நடிகை புவனேஷ்வரி.