அந்த ஆபாச AI வீடியோவை டெலீட் பண்ணுங்க..இல்லன்னா!! நடிகை சுனைனா எச்சரிக்கை..
சுனைனா
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை சுனைனா. சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா, சமீபத்தில் தன் முகத்தை வைத்து ஆபாசமான காட்சிகளில் இணைத்து, AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை பரப்பி வருவதாக குற்றம் சாட்டி பகீரங்கமான எச்சரித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது தென்னிந்திய திரையுலகை அதிரவைத்தது.

ஆரம்பத்தில் தன்னுடைய கண்டனத்தை அறிக்கையில் தெரிவித்த சுனைனா, ஒருக்கட்டத்தில் பகீரங்கமாக எச்சரித்தபடி அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
டெலீட் பண்ணுங்க
தொழில்நுட்பச் சட்டம் ஐடி ஆக்ட் 2000 மற்றும் பாரதிய நியா சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் மாபெரும் குற்றவியல் செயல். இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாத, இந்த வீடியோவை உருவாக்கவும் பகிர்வதிலும் தொடர்புடைய அனைவரும் உடனடியாக அதனை அனைத்துக் கணக்குகள், குரூப்புகள் மற்றும் போன்களில் இருந்தும் அழிக்க வேண்டும்.

மேற்கொண்டு பகிர்பவர்கள் மீதும் எந்தவொரு முன் அறிவிப்புமின்றி சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். என்னுடைய நல விரும்பிகள், ஊடகங்கள், பொதுமக்கள் இந்த அருவருப்பான வீடியோவை எங்கும் பகிர வேண்டாம். ஒருவேலை மாஃபிங் செய்யப்பட்ட வீடியோவை நீங்கள் காண நேரிட்டால் உடனடியாக அந்த வீடியோவை ரிப்போர்ட் செய்யுங்கள். அப்போது தான் இதுபோன்ற ஆபாசமாக வீடியோவை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார் நடிகை சுனைனா.
