ஜப்பானில் பலபேருடன் ஆடையின்றி குளித்தேன்!! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட போட்டோ..
ஐக்கி பெர்ரி
தஞ்சாவூரில் பிறந்த மருத்துவராக வலம் வந்த ஐக்கி பெர்ரி ராப் இசையில் ஆர்வம் ஏற்பட்டு வெள்ளைக்கார பெண் போலவே மாறி அசத்தினார். பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ஆல்பம் பாடல்களை பாடி தன்னுடைய ராப் பாடலால் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் ஜப்பான் சுற்றுலா சென்றுள்ள ஐக்கி பெர்ரி, அங்கு ஓப்பன் பாத்ரூமில் குளித்த அனுபவம் குறித்து ஒரு பதிவினை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஓப்பன் பாத்ரூமில்
அதில், முதலில் மற்றவர்களுடன் நிர்வாணமாக எப்படி நிற்பது என்றும் குளிப்பது என்றும் ரொம்பவே பயந்தேன், கூச்சப்பட்டேன். ஆனால் அதன்பின் ஒரு தில்லுடன் இறங்கி இதையும் ட்ரை பண்ணிடலாம் என அதை பண்ணிப்பார்த்தேன்.
அங்கே யாருக்கும் நிர்வாணத்தை அசிங்கமாகவோ, ஆபாசமாகவோ பார்க்கவில்லை என்பதை புரிந்து கொண்டப்பின் அந்த அனுபவம் சிறப்பாக இருந்தது என்று பாத்டப்பில் குளித்தப்போது எடுத்த புகைபடத்தை பகிர்ந்துள்ளார் ஐக்கி பெர்ரி.