சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரின் மனைவியை தூக்கும் பிக்பாஸ் 6? இணையத்தில் வைரலாகும் தகவல்..

Kamal Haasan Bigg Boss
By Edward Jul 12, 2022 03:15 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 5 சீசன்களையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த ஆண்டு டைட்டில் வின்னராக ராஜு தேர்வு செய்யப்பட்டு டைட்டிலை தட்டிச்சென்றார்.

இரண்டாம் இடத்தினை விஜே பிரியங்கா தட்டிச்சென்றார். இந்நிலையில் இந்த ஆண்டு பிக்பாஸ் 6 சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்ற தகவலுக்காக ரசிகர்கள் காத்திருந்து வருகிறார். அப்படி யார் யார் போட்டியாளராக கலந்து கொள்கிறார்கள் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள சூப்பர் சிங்கர் 6ல் பங்கேற்று டைட்டில் வின்னரான செந்திலின் மனைவியும் SS6-ன் போட்டியாளருமான ராஜலட்சுமி கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிக்பாஸ் டிராக்கராக இருந்து வரும் இமந்த் என்பவர் க்ளூவாக லேடி சிங்கர் என்று குறிப்பிட்டு ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் செந்தில் மனைவி ராஜலட்சுமியா? என்று கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் பிக்பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்கப்போவது, பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கிய சிம்புவா? இல்லை உலக நாயகனா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

GalleryGallery