சும்மா இருந்த குயின்சிக்கு எதுக்கு இத்தனை லட்சம் சம்பளம்! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் வரும் பிரபலங்கள் பலரும் அதிகம் சம்பளம் வரும் என்பதற்காக தான் வருகிறார்கள். ஆனால் புதுமுகங்களாக இருப்பவர்கள் என்றால் புகழை தேடி இந்த ஷோவுக்கு வருகிறார்கள். சிலருக்கு ஆர்மி உருவாகும் அளவுக்கு ரசிகர்கள் கிடைக்கிறார்கள், ஆனால் ஒரு சில போட்டியாளர்களுக்கு இருக்கும் பெயரும் டேமேஜ் ஆகும் அளவுக்கு தான் ட்ரோல்கள் வரும்.
அப்படி தற்போது ஒளிபரப்பாகி வரும் 6ம் சீசனில் பல போட்டியாளர்கள் ட்ரோல்களை சந்தித்து வருகிறார்கள். வீட்டில் எதுவும் சுவாரஸ்யமாக செய்யாமல் மிக்ஸ்சர் சாப்பிட்டு கொண்டிருகிறார்கள் என விமர்சனங்கள் வருகின்றன.

குயின்சி சம்பளம்
நேற்று எலிமினேட் ஆகி வெளியேறிய குயின்சியும் இதுபோன்ற ட்ரோல்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது குயின்சி இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு 8 லட்சம் ருபாய் வரை சம்பளமாக பெறுகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இவருக்கு எதற்கு இத்தனை லட்சம் சம்பளம், சாப்பிட்டுவிட்டு தூங்கியதற்கு இவ்ளோ சம்பளமா என ட்ரோல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
