இது என்ன டா பிக் பாஸ் 7 டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை.. அந்த கொடுமையே நீங்களே பாருங்க
பிக் பாஸ் 7 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. கடந்த வாரம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சண்டைகள் வெடித்தது. ஆனால், இந்த வாரம் தீபாவளி கொண்டாட்டத்தில் இருந்து துவங்கியதால் சற்று அமைதியாக தான் நிகழ்ச்சி செல்கிறது.
இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான எபிசோடில் தீபாவளி ஸ்பெஷலாக நடிகை ஸ்ருஷ்டி மற்றும் நடிகர் புகழ் என்ட்ரி கொடுத்தனர். இந்த எபிசோடில் ஒரு டாஸ்க் நடைபெற்று கொண்டிருந்த போது, வீட்டிற்கு மெயின் கதவு திறந்துவைக்கப்பட்டு இருந்தது.
இதை கவனித்த பிக் பாஸ் கதவிற்கு பக்கத்தில் இருந்த கூல் சுரேஷை எதுவும் சொல்லாமல், திடீரென விக்ரமை அழைத்து கதவை மூடுங்கள் என கூறினார். இதற்கு கூல் சுரேஷ் 'விக்ரமை பிக் பாஸ் எந்தெந்த விஷயத்திற்கு எல்லாம் பயன்படுத்துகிறார் பாருங்க' என கமெண்ட் அடித்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் அடிக்கடி தன்னை டைட்டில் வின்னர் என அடையாளப்படுத்தி கொண்டிருக்கும் விக்ரமிற்கு இப்படியொரு சோதனையா என நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
Enna da idhu …. Enga title winner ku Vandhu sodhana #biggbosstamil #biggbosstamil7pic.twitter.com/e6Ks1r4dIh
— Imadh (@MSimath) November 13, 2023