பிக்பாஸ் சீசன் 9 வீட்டைவிட்டு அதிரடியாக வேளியேற்றப்படுவது இவர்தான்!! 3வது எவிக்ஷன்..
பிக்பாஸ் சீசன் 9
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷாக்களில் ஒன்றாக இருப்பது பிக்பாஸ். தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 9 சிறப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முதல் வாரம் முடியும் முன்பே, நந்தினி என்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறி வெளியேறினார்.

அவரை தொடர்ந்து முதல் வார எவிக்ஷனில் குறைந்த வாக்கு பெற்று பிரவீன் காந்தி எவிக்ட்டாகினார். கடந்த வாரம் 2வது எவிக்ஷனில் அப்சரா சிஜே எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
இந்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் வியானா, பிரவீன் ராஜ், சுபிக்ஷா, துஷார், கலை, ரம்யா ஜோ, அரோரா, ஆதிரை இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.
இவர்களில் வியானா அதிகபட்ச வாக்குகளை பெற்று முதலிடத்திலும், பிரவீன் ராஜ், சுபிக்ஷா, துஷா, கலையரசன் ஆகியோர் கணிசமான வாக்குகள் பெற்று தப்பித்துள்ளனர்.

3வது எவிக்ஷன்
மேலும், நடந்து முடிந்த டாஸ்கில் 30 காயின்கள் பெற்று வெற்றிப்பெற்ற சுபிக்ஷா, எவிக்ஷனில் இருந்து சேவ்-ஆகிறார். இறுதியில் ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரை போன்ற போட்டியாளர்கள் தான் குறைவான வாக்குகள் பெற்று வருகிறார்கள்.
அந்தவகையில் இவர்களில் கம்மியான வாக்குகள் பெற்றுள்ளது ஆதிரை தான் என்பதால் அவர் 3வது வாரத்தில் எவிக்ட்டாகி வெளியேறும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
ஆதிரை நடந்து கொள்ளும் விதம் 18+ விஷயமாக இருப்பதாலும் அவரை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துக்களும் நெட்டிசன்கள் மத்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
