அவன்லாம் உன்மேல வெறில இருப்பான்!! விஜய் சேதுபதிக்கு சாபம் விட்ட பிரவீன் காந்தி..
பிக்பாஸ் சீசன் 9
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தொடங்கி 2 வாரமான நிலையில், 20 போட்டியாளர்களில் நந்தினி, பிரவீன் காந்தி என இருவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இயக்குநர் பிரவீன் காந்தி, பல பேட்டிகளில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்கள் மற்றும் விஜய் சேதுபதி தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவன்லாம் உன்மேல வெறில
ஒரு பேட்டியில், கமலும் பிக்பாஸ்ல ஹோஸ்டா இருந்தார். ஆனால், விஜய் சேதுபதிக்கு அவர் முன்னாடி நாங்கெல்லாம் குற்றவாலி போல, ஆதிக்கம் தான் அதிகமா இருக்கு. ஆதிக்கம் பாதிக்கும்னு அவருக்கு தெரியல.
விஜய் சேதுபதி போராடி இந்த இடத்துக்கு வந்திருக்காரு, அத பாராட்டணும் தான். ஆனால் இந்த 20 பேர்ல இருந்து நாளைக்கு அதே ஒருத்தன் மாதிரி வரலாமே, அப்படி வந்தா, அன்னிக்கி இவர் என்ன அவமானத்திட்டார்னு உன் மேல வெறில தான் இருப்பான்.
நீதிபதி மாதிரி இருக்கிறது சரி தான், ஆனா அதுல அன்பு இருக்கணும், போட்டியாளர்கள் மேல தவறே இருந்தாலும் குழந்தை மாதிரி தான் கையாளனுமே தவிர கொதறி எடுக்கக்கூடாது என்று பிரவீன் காந்தி விமர்சித்து பேசியிருக்கிறா.