பிக்பாஸ் 9ல் வீட்டைவிட்டு வெளியேறிய வியானாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 9
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 9 தற்போது 70 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 9ல் கலந்து கொண்டு வரும் போட்டியாளர்கள் செய்யும் செயல்கள், மக்கள் மத்தியில் சற்று முகம் சுளிக்க வைத்து வருகிறது.

வியானாவின் சம்பளம்
இந்நிலையில் கடந்த வார இறுதியில் டபுள் எவிக்ஷனின் சனிக்கிழமை எபிசோட்டில் ரம்யா ஜோ வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் வியானா எவிட்டாகி வெளியேறினார்.
தற்போது 70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வியானாவுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வியானாவிற்கு ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதன்படி 70 நாட்களுக்கு ரூ. 10 லட்சம் சம்பளமாக பெற்றுச் சென்றுள்ளார் வியானா.