பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் 9 வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இன்று பிக் பாஸ் 9 பைனல் ஒளிபரப்பாகவிருந்தாலும், நேற்று பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிட்டது.

பிக் பாஸ் 9 பைனல் போட்டிக்கு சபரி, திவ்யா கணேஷ், அரோரா மற்றும் விக்கல்ஸ் விக்ரம் என நான்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெரும் அந்த ஒரு நபர் டைட்டில் வெல்வார் என்பதை நாம் அறிவோம்.
இந்த நிலையில், நடந்து முடிந்த பிக் பாஸ் 9 பைனல் போட்டியின் படப்பிடிப்பில் இருந்து வந்துள்ள தகவல் என்னவென்றால் திவ்யா கணேஷ்தான் பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.

திவ்யா கணேஷ் வெற்றிபெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் திவ்யா கணேஷ்தான் வெற்றிபெறுவார் என்பது கடந்த சில நாட்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.