பிக் பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ்.. ரூ. 50 லட்சம் பரிசு.. மேலும் ஒரு சர்ப்ரைஸ்..
Bigg Boss
Bigg boss 9 tamil
By Kathick
பிக் பாஸ் 9 பைனல் நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் சபரி, திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா என நான்கு போட்டியாளர்கள் பைனலில் களமிறங்கினர்.
இதில் அரோரா நான்காவது இடத்தை பிடித்தார். மேலும் விக்ரம் மூன்றாவது இடத்தையும், சபரி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற திவ்யா கணேஷ் பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.

டைட்டில் வென்ற திவ்யா கணேஷுக்கு பரிசுத்தொகை 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசும் தரப்பட்டு இருக்கிறது.
ஷோவின் ஸ்பான்சர் ஆக இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் லேட்டஸ்ட் victoris காரை திவ்யாவுக்கு சர்ப்ரைஸ் பரிசாக கொடுத்து இருக்கிறது. அந்த காரின் விலை ரூ. 25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
