அத தான் போடுவேன் பாக்குறவன் பாரு பாக்காதவன் போ.. பிக் பாஸ் அபிராமி ஓபன் டாக்
Bigg Boss
Tamil Actress
Actress
Abhirami Venkatachalam
By Dhiviyarajan
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.
இதனை அடுத்து இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமியிடம் தொகுப்பாளர், நீங்கள் யாரை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி உடைகளை அணிகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.
பதில் அளித்த அபிராமி, எனக்கு அந்த மாதிரி இன்ஸ்ரேஷன் என்று யாரும் கிடையாது. எனக்கு பிடித்த ஆடைகளை நான் போடுகிறேன். அதை பார்க்கிறவன் பாரு பாக்காதவன் போயா என்பது என்னுடைய கொள்கை என்று கூறியுள்ளார் அபிராமி