பிக்பாஸ் ஐசு குடும்பத்தை அழைக்காத அமீர்!! தந்தை அஷ்ரப் பகிர்ந்த அதிர்ச்சி பதிவு..
அமீர் - பாவ்னி ரெட்டி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்று தற்போது ரியல் ஜோடியாக மாறியிருக்கிறார்கள் அமீர் - பாவ்னி ரெட்டி.
பிக்பாஸ் சீசன் 5ல் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு விஜய் டிவியை சேர்ந்த பலரும் பங்கேற்ற நிலையில், பிரியங்கா திருமணத்திற்கு வராதா மாகாபா ஆனந்தும் இவர்கள் திருமணத்திற்கு வரவில்லை.
மேலும் அமீருக்கு நெருக்கமான உறவினரான பிக்பாஸ் ஐசு மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்துக்கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம் என்று ஐசு மற்றும் அவரது தந்தை இணையத்தில் சில கருத்துக்கள் வெளியான நிலையில் ஐசுவின் தந்தை அஷ்ரப் ஒரு பதினை பகிர்ந்து பின் டெலீட் செய்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.
ஐசுவின் தந்தை அஷ்ரப்
நாய் ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தால், அதை காப்பாற்றி வீட்டில் வைத்து பேணிக்காத்து வளர்க்கலாம். இதுவே அந்த இடத்தில் ஒரு மனிதர் இருந்தால் அப்படியே கண்டுக்கொள்ளாமல் அந்த இடத்திலேயே விட்டுவிட்டு நகர்ந்து சென்றுவிடுங்கள்.
அந்த மனிதருக்கு உதவவேண்டும் என்ற ஆசையில் வீட்டுக்கு மட்டும் அழைத்து பாதுகாத்து வளர்க்க வேண்டாம். அப்படி வளர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கு நானே ஒரு சிறந்த உதாரணம் என்று அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
தாயை இழந்த போது அமீரை பாதுகாத்து வளர்த்தவர் தான் பிக்பாஸ் ஐசுவின் தந்தை அஷ்ரப். தற்போது அவர் நாயுடன் ஒப்பிட்டு ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.