காதலருடன் ஜாலியாக சென்றுள்ள பிக் பாஸ் அர்ச்சனா.. அதுவும் எங்க தெரியுமா? அட சூப்பர்

Bigg Boss Trending Videos Archana Ravichandran
By Bhavya Apr 14, 2025 04:30 AM GMT
Report

அர்ச்சனா - அருண்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து டைட்டிலை வென்று மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை அர்ச்சனா.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் விஜய் டிவி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்துள்ளார். அருண் பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

காதலருடன் ஜாலியாக சென்றுள்ள பிக் பாஸ் அர்ச்சனா.. அதுவும் எங்க தெரியுமா? அட சூப்பர் | Bigg Boss Archana Video Goes Viral

எங்க தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அடிக்கடி வெளியே ஒன்றாக சுற்றி வரும் அருண் மற்றும் அர்ச்சனா தற்போது ஜோடியாக ட்ரிப் சென்று இருக்கின்றனர்.

இதன் வீடியோவை அர்ச்சனா வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது. இருவரும் ஜோடியாக மைசூருக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்கள். இதோ வீடியோ,