விஜய் மாதிரி ஆட சொன்னா ரோபோ டான்ஸ் ஆடுறாரு.. பிக் பாஸ் பாலாஜி முருகதாஸை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்
Bigg Boss
By Parthiban.A
பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் அவர் இரண்டாம் இடம் பிடித்தாலும், இந்த வருடம் நடந்த பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் டைட்டில் ஜெயித்தார். அதனால் அவருக்கு அதிகம் பாராட்டுகள் குவிந்தது.
அவர் பிரபலம் என்பதால் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கின்றனர். அங்கு சென்ற அவருக்கு ஒரு விருதையும் கொடுத்திருக்கின்றனர்.
அந்த மேடையில் எதாவது செய்ய வேண்டுமே என பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார் அவர். அந்த வீடியோவை தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் இது விஜய் டான்ஸ் போல இல்லை, ரோபோ டான்ஸ் ஆடுவது போல இருக்கிறது என கலாய்த்து வருகின்றனர்.