சௌந்தர்யாவை ஜெயிக்கவைக்க காதலர் செய்யும் மோசடி.. நடிகை புகார்!! என்ன ஒரு புத்திசாலித்தனம்

Vijay Sethupathi Vishnu Vijay Bigg Boss Tamil 8
By Bhavya Jan 17, 2025 04:30 AM GMT
Report

பிக் பாஸ்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் ஷாவின் இறுதி வாரம் என்பதால் டைட்டில் வின்னர் யார் என்பதை வாக்கெடுப்பு மூலமாக தேர்வு செய்ய இருக்கின்றனர்.

இதனால் ரசிகர்களும் தனக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து அதன் மூலம் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியாளருக்கும் அதற்கான நம்பர் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

சௌந்தர்யாவை ஜெயிக்கவைக்க காதலர் செய்யும் மோசடி.. நடிகை புகார்!! என்ன ஒரு புத்திசாலித்தனம் | Bigg Boss Contestant Voting Scam

பைனலில் இருக்கும் போட்டியாளர்களின் ஒருவரான சௌந்தர்யாவின் மீது ஏற்கனவே PR வைத்திருப்பதாக ட்ரோல்கள் இருந்து வருகிறது. பலரும் அதை பிக் பாஸ் வீட்டில் கூறி அவரை இதற்கு முன் தாக்கி பேசி இருக்கிறார்கள்.

நடிகை புகார்

இந்நிலையில் இறுதி வாரத்தில் சௌந்தர்யாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்க, அவரது காதலர் விஷ்ணு ஒரு மோசடி வேலை செய்து வருகிறார் என பிரபல நடிகை சனம் ஷெட்டி புகார் கூறி இருக்கிறார்.

சௌந்தர்யாவை ஜெயிக்கவைக்க காதலர் செய்யும் மோசடி.. நடிகை புகார்!! என்ன ஒரு புத்திசாலித்தனம் | Bigg Boss Contestant Voting Scam

அதாவது, சௌந்தர்யாவுக்கு வாக்கு அளிக்கும் மிஸ்டு கால் போன் நம்பரை எடுத்து தனது இன்ஸ்டா followersகளுக்கு அனுப்பி "Urgent.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க" என மெசேஜ் அனுப்புகிறாராம் விஷ்ணு.

மற்றவர்களும் அதை நம்பி போன் செய்தால் அது பிக் பாஸ் voting நம்பருக்கு சென்று விடுகிறது. இப்படி விஷ்ணு scam செய்வதாக நடிகை சனம் ஷெட்டி புகார் கூறியுள்ளார்.