போலீசில் பொய் புகார் அளித்த ரச்சித்தா மகாலட்சுமி .. பிக் பாஸ்ஸில் மனைவி குறித்து பேசிய தினேஷ்
சின்னத்திரை ஜோடிகளாக வலம் வந்த ரச்சித்தா மகாலட்சுமி - தினேஷ் ஜோடி சில தனிப்பட்ட காரணத்தால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் ரச்சித்தா மகாலட்சுமி, "தினேஷ் எனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிக்கிறார் அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருகிறார்" என்று போலீசாரில் புகார் அளித்தார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தினேஷ் தவறான நோக்கத்தில் மெசேஜ் அனுப்பவில்லை, ரச்சித்தா மகாலட்சுமி கூறுவது பொய்யான தகவல் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 ல் வைல்ட் கால் மூலம் களமிறங்கியுள்ளார் தினேஷ். இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான பிரதீப் தினேஷ் இடம், இதற்கு முன்னாள் பிக் பாஸ் சீசன் பார்த்துளீர்களா என்று கேட்டார்.
பதில் அளித்த தினேஷ், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில்லை. போன சீசனில் என்னுடைய மனைவி கலந்து கொண்டார் அவருக்காக பார்த்தேன் என்று கூறியுள்ளார்.