சல்மான் கான் டூ விஜய் சேதுபதி!! பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக திகழ்ந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் பிக்பாஸ் 19 சீசன்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.
தமிழில் 9வது சீசன் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதி தலைமையில் தொடங்கவும் உள்ளது. இந்நிலையில் சல்மான் கான் முதல் விஜய் சேதுபதி வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சல்மான் கான் டூ விஜய் சேதுபதி
இந்தியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 19 நிகழ்சிகாக நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க சுமார் ரூ. 120 முதல் 150 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். கடந்த சீசனை தொகுத்து வழங்க ரூ. 250 கோடி வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் நாகர்ஜுனா, சுமார் ரூ. 30 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம்.
கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கிச்சா சுதீப், ரூ. 20 கோடி சம்பளம் பெறுகிறார்.
சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் மலையாள சீச்ஃஅன் 7க்காக நடிகர் மோகன்லாலுக்கு சுமார் ரூ. 18 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாம்.
தமிழ் பிக்பாஸ் சீசன் 7யை தொகுத்து வழங்க நடிகர் கமல் ஹாசன் சுமார் ரூ. 150 கோடியாக சம்பளம் பெற்றிருக்கிறார்.
தமிழ் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதிபதி 9வது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளதால் அவருக்கு சுமார் ரூ. 60 கோடி சம்பளமாக கொடுக்கவிருக்கிறார்களாம்.