சேலையில் மயக்கும் சூப்பர் சிங்கர் பிரியங்கா என்கே!! ரீசெண்ட் கிளிக்ஸ்..

Super Singer Priyanka NK Tamil Singers Idli Kadai
By Edward Sep 23, 2025 06:30 PM GMT
Report

பிரியங்கா NK

சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK. மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபகாலமாக பல இசையமைப்பாளர்களின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடி வரும் பிரியங்கா, இன்ஸ்கிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து பாட்டு பாடும் வீடியோவையும் போட்டோஷூட் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு சேலையில் மயக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லி கடை படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடலை மேடையில் பாடியிருக்கிறார் பிரியங்கா. நிகழ்ச்சிக்கு வெள்ளைநிற சேலையணிந்து சென்ற புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார் பிரியங்கா என்கே.