சத்யா மற்றும் ஜெப்ரியை வெச்சி செய்த ஜாக்குலின்!! விஜய் சேதுபதி முன் நடந்த சம்பவம்
பிக் பாஸ் சீசன் 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 தற்போது முடிவுக்கு வந்தது. இதில், முக்கிய போட்டியாளராக இருந்த ஜாக்குலின் கடைசி வாரத்தில் எலிமினேட் ஆகிவிட்டார்.
அவர் பணப்பெட்டி டாஸ்கில் ஓடிச்சென்று மீண்டும் வீட்டுக்குள் வர தாமதம் ஆனதால் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். அதை கண்டு ஜெப்ரி மற்றும் சத்யா ஆகிய இருவரும் சிரித்து கொண்டிருப்பது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
நடந்த சம்பவம்
இதை பற்றி பைனலில் விஜய் சேதுபதி ஜாக்குலினிடம் கேள்வி எழுப்பினார். அதாவது அந்த வீடியோவை பார்த்தீர்களா? என விஜய் சேதுபதி கேட்க, "பார்த்துவிட்டேன் சார்.
என் எலிமினேஷனை கொண்டாடுனாங்க. கூட இருந்தே இப்படி செய்கிறார்களே என வருத்தமாக இருந்தது" என ஜாக்குலின் கூறினார்.
அதற்கு சத்யா தன் தரப்பு விளக்கம் கொடுத்தார். அதில், " நாங்கள் உன்னை பார்த்து சிரிக்கவில்லை, வீட்டில் மற்றவர்கள் முகத்தில் இருக்கும் ரியாக்ஷன்கள் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தான் சிரித்தோம், நீ புண்பட்டு இருந்தால் சாரி" என சத்யா கூறினார். மேடையில் நடந்த இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.