காதலரை அறிமுகம் செய்த ஜாக்குலின்.. ஜோடியின் புகைப்படம்
Bigg Boss
Actress
Bigg Boss Tamil 8
By Karthick Raja
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் ஜாக்குலின். இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், பிக் பாஸ் 8ல் போட்டியாளராகவும் களமிறங்கினார்.

இந்த நிலையில் இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஜாக்குலின் அவரது காதலர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். யுவராஜ் செல்வநம்பி என்பவரை தான் அவர் காதலிக்கிறாராம். அவர் கேமராமேன் ஆக பணியாற்றி வருகிறாராம்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஜாக்குலினை பார்க்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்குலின் தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.