TRPக்காக 3 பிக்பாஸ் பிரபலங்களுக்கு கொரானா ட்ரீட் கொடுத்த பிரபல தொலைக்காட்சி! வைரலாகும் சென்றாயனின் காணொளி..

gabriella bbjodigal sentrayan biggbossjodigal aajith
By Jai May 12, 2021 05:00 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய டிஆர்பிக்காக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தமிழில் 4வது சீசன் நிறைவடைந்து தற்போது 4 சீசன் போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது.

அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்கு தேர்வான ஜோடிகளுடன் ஆரம்ப நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டாடினர். கடந்த வாரம் சிலர் மட்டும் ஆடிய எபிசோட் ஒளிப்பரப்பான நிலையில், பிக்பாஸ் கேப்ரில்லாவிற்கு கொரானா வைரஸ் இருப்பதாக உறுதியானது.

அவரை தொடர்ந்து, பிக்பாஸ் ஆஜித்திற்கும் கொரானா உறுதியாகியுள்ளது. கேப்ரில்லாவுடன் இணைந்து நடனமாடிய ஆஜித்திற்கு கொரானா டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில் அவரும் அவரது குடும்பங்களும் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் போட்டியாளரான சென்றாயனிற்கும் கொரானா வைரஸ் பாசிவ் என்று வந்துள்ளது. தற்போது அதை உறுதி செய்த சென்றாயன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’கொரொனா ஒரு டேஞ்சரஸ் புலொ’ என்று பதிவிட்டுள்ளார்.

அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் ஜூலி இணைந்து ஆடியதால் அவருக்கும் டெஸ்ட் எடுக்கப்படுவதாக இணையத்தில் பரவி வருகிறது.