25 வயது மலேசிய பெண்ணுடன் இரண்டாம் திருமணம்... பப்லுவிற்கு சப்போர்ட் செய்த பிக்பாஸ் காஜல்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல் மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். நான் ச்கப்பு மனிதன் படத்தில் ஆரம்பித்த ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.
மர்ம தேசம் பப்லு அதன்பின் சின்னத்திரையில் மர்ம தேசம் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் நடிகை ராதிகா தயாரிப்பில் வெளியான் வாணி ராணி சிரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.

பீனா என்பவரை 1994ல் திருமணம் செய்து கொண்ட பப்லு, ஹகமது மோகன் ஜாஃபர் என்ற மகனையும் பெற்று வளர்த்து வந்தார். 25 வயதான மகன் ஹகமது ஆட்டிஸம் குறைபாடு இருப்பதால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விட்டு பிரிந்துவிட்டார்.
தனியாக மகனை வளர்த்து வரும் பப்லு 23 வயதான மலேசிய இளம்பெண்ணை திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி வெளியானது. இதனால் இணையத்தில் பப்லுவை விமர்சித்து வந்த நிலையில் பிக்பாஸ் நடிகையும் சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியுமான காஜல் இதற்கு பதில் கொடுத்து நச் கொடுத்துள்ளார்.
அதில், பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான். இதுல உங்களுக்கு என்னய்யா பிரச்சனை. பொறாமை புடிச்ச உலகம் டா என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.