பிக் பாஸில் கமல் ஹாசன் இல்லை.. புதிய தொகுப்பாளராக முன்னணி பிரபலம்

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். முதல் சீசனில் இருந்து தற்போது 5வது வரை உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய கமல் ஹாசன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக டுவிட்டர் வழியாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் கமல், எவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இத்தனை வருடங்களாக கமல் தொகுத்து வழங்கி தக்கவைத்திருந்த இந்த இடத்தை, கமல் ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் நிரப்புவார் என கூறுகின்றனர். ஆம், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக, ஸ்ருதி ஹாசன் தான் இந்த வாரம் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.    

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்