"கத முடிந்ததும் எல்லாருக்கும் ஒரே 'அடக்கம்' தான்", பிக் பாஸ் போட்டியாளர்களை கலாய்த்தெடுத்த கமல்!
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ.
இந்த வாரம் சின்னப்பொண்ணு வெளியேறிய நிலையில், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலை அகம் டிவி வழியில் பார்த்து உரையாடிய மற்ற போட்டியாளர்களிடம் இந்த வாரம் முழுவதும் நடந்த சம்பவங்கள் குறித்து ஒவ்வொன்றாக பேசினார் கமல்.
அப்பொழுது நடந்து முடிந்த டாஸ்கின்போது வீட்டிலிருந்த சக பெண் போட்டியாளரைப் பார்த்து அடக்கம் என்ற வார்த்தையை தாமரைச்செல்வி பயன்படுத்தியத்தின் எதிரொலியாக அதுவும் கமலுடன் பேசப்பட்டது.
அதற்கு பதில் கூறிய கமல், "ஆண் பெண் வேற்றுமை இல்லாம கத முடிஞ்சதும் எல்லார்க்கும் ஒரே அடக்கம் தான்" என பொத்தாம் பொதுவாக கூறி ஹவுஸ் மேட்ஸ்-ஐ கலாய்த்திருக்கிறார்.
ஆணுக்கு ஒரு அடக்கம்...... பொண்ணுக்கு ஒரு அடக்கம் .... கிடையாது... கதை முடிஞ்சுதுனா எல்லாருக்கும் ஒரே அடக்கம் தான் ???????? #BiggBoss5Tamil #BiggBossTamil5 #BiggBossTamil #KamalHaasan pic.twitter.com/06facI7RR5
— உங்கள்_நான் (@manisekaran1) October 31, 2021