35 நாட்களில் இத்தனை லட்சம் தானா... பிக்பாஸ் மகேஷ்வரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கு இந்நிகழ்ச்சியின் 6வது சீசன் அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கப்பட்டது.
பெரியளவில் பிரபலங்கள் இல்லாமல் தொலைக்காட்சி பிரபலங்கள் 21 பேரை வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். 30 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் 6ல் ஜிபி முத்து தானாகவே வெளியேறியதை அடுத்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா எலிமினேட் செய்து அனுப்பட்டனர்.
நேற்றைய ஞாயிற்று கிழமை நடந்த கமல் ஹாசன் நிகழ்ச்சியில் விஜே மகேஷ்வரி குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அனுப்பட்டார்.
35 நாட்கள் இருந்துள்ள மகேஷ்வரி பிக்பாஸ் வீட்டில் இருக்க ஒரு நாளை 23 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டு மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமான தொகையை பெற்றுளாராம். மகேஷவரி வெளியில் அனுப்பட்டதால் அவரது ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்று கூறி வருகிறார்கள்.