Bigg Boss 7 : தன்பால் ஈர்ப்பாளரை இழிவுப்படுத்திய பெண்!! கோபத்தில் கொந்தளித்த மோகன்லால்
பிக்பாஸ் 7
தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியின் ஒன்று தான் பிக்பாஸ். இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.
தமிழில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் பிரமாண்டமான முறையில் தொடங்கவுள்ளது. தற்போது, நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
ஆதிலா மற்றும் நூரா
இதில், ஆதிலா மற்றும் நூரா என்ற பெண் ஒருபாலின தம்பதி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்கள். இவர்களுடன் வைல்ட் கார்ட் சுற்றில் வேத்லட்சுமி மற்றும் மஸ்தானி என்ற இரு பெண் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இணைந்தார்கள்.
லட்சுமி மற்றும் மஸ்தானி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு வரை ஆதிலா - நூரா, மற்ற போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி வந்தனர். ஆனால் லட்சுமி, மஸ்தானி உள்ளே நுழைந்த நாளிலிருந்து அவர்கள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து பேசி வந்தனர்.
லட்சுமி, இவர்களை போன்றவர்களை நான் வீட்டிற்குள் கூட விடமாட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
கொந்தளித்த மோகன்லால்
இதுதொடர்பாக கடந்தவார சனிக்கிழமை நிகழ்ச்சியில் லட்சுமியின் கருத்தினை கடுமையாக எதிர்த்து மோகன்லால் பேசினார். அதில், ஒரு பாலின ஜோடிகளுக்கான அங்கீகாரத்தை நீதிமன்றமே வழங்கியிருக்கிறது.
ஆதிலா - நூரா இருவரு எங்களால் தேர்தெடுக்கப்பட்டு இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்கள். இப்படி இருவர் இந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதை ஒப்புகொண்டு தானே இந்நிகழ்ச்சிக்கு வந்தீர்கள்.
பின் எப்படி உங்களால் சக மனிதரை தரைகுறைவாக பேச முடிந்தது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு இங்கே இவர்களுடன் இருக்க விருப்பமில்லை என்றால் தாராளமாக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறலாம் என்றும் கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறார் மோகன்லால்.
Not sure whether anchor speaks fully on their own or sticks to a written script or something. But that ‘ente veettil kettuvallo njanavare’ part was truly 🫂, Considering that probably the majority of the audience is on a different pagepic.twitter.com/rfEOrOkn6t
— ദ.മൂ (@DasaMool) September 13, 2025