களைகட்டிய அமீர் - பாவனி ஹல்தி கொண்டாட்டம்.. ஓடி வந்த பிரியங்கா, வீடியோ வைரல்
அமீர் - பாவனி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் ஒரு காதல் ஜோடி இணைவதை வழக்கமாக பார்த்து வருகிறோம். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது காதலர்களாக தங்களை அடையாளப் படுத்தாமல் வெளியே வந்து தங்களின் காதலை கூறியவர்கள் அமீர் மற்றும் பாவ்னி.
நடிகை பாவ்னி தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழ் சின்னத்திரை பக்கம் வந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் காதலித்து வந்த அமீர் மற்றும் பாவ்னி மூன்று வருடங்களாக Living In வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டு காதலர் தினத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அவர்களின் திருமண தேதியை அறிவித்தனர். அதாவது, இன்று ஏப்ரல் 20ம் தேதி இந்த ஜோடியின் திருமணம் நடைபெற உள்ளது.
வீடியோ வைரல்
இந்நிலையில் அமீர்-பாவ்னி ஹல்தி கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இவர்களின் நெருங்கிய தோழியான தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொண்டுள்ளார்.
பிரியங்காவிற்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஜோடிக்கு ரசிகர்கள், நட்சத்திரங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.