உனக்கு செட்டாகவில்லை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இயக்குனரால் அசிங்கப்படுத்தி அனுப்பட்ட பிக்பாஸ் ராஜு..

Bigg Boss Serials
By Edward Aug 16, 2022 09:48 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகை அதே தொலைக்காட்சி சமீபத்தில் பிக்பாஸ் ராஜுவை வைத்து ஆரம்பித்த ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் ராஜு கதிர், ஜீவா கதாபாத்திரத்தை பற்றி குமரனிடம் பேசியுள்ளார். ராஜுவும் குமரனும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆடிஷனில் கதிர் ரோலுக்காக கலந்து கொண்டுள்ளனர். அப்போது தலையை நன்றாக வாரி சென்று ஹார்ட் வொர்க் மேன் ரோல் தான் என்று கூறி நடிக்க வைத்தார்களாம்.

நீண்ட டயலாக்கை பேசி முடித்துவிட்டு கேமராமேன் கேமராவை ஆஃப் செய்துவிட்டார். இயக்குனரிடம் சென்று ராஜு கேட்டதற்கு எக்ஸ்ஃபிரஷனே சரியில்லை என்று என்னை தூக்கிவிட்டார்கள் என்று ராஜு கூறியுள்ளார். பின் சீரியலில் பார்த்த போது குமரனும் அப்படி தான் நடித்து வருகிறார் என்று காமெடியாக கூறியுள்ளார்.