இதான் பெயரை மாத்துற லட்சணமா? அசிங்கமா இருக்கு.!! அரோராவை வெளுத்து வாங்கிய தோழி ரியா..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 தற்போது ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில், நந்தினி மனதளவில் என்னால் இருக்க முடியாது என்று வீட்டைவிட்டு வெளியேறினார். இதனைதொடர்ந்து பிரவீன் காந்தி குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் செய்யப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 12 ஆவது நாள் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் அப்சரா சிஜே தான் எவிக்ட்டாகி வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அரோரா தோழி ரியா
இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் பிரபலமான அரோராவின் தோழி ரியா, அவரை பற்றி வெளிப்படையான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அதில், அரோரா செல்லும் போது அவரது பெயரை மாற்ற வேண்டும் என நீங்க தானே சொன்னீங்க, இப்போ உங்க ஃபிரெண்டை பத்தி பேசுங்க என்று நெட்டிசன்கள் என்னை கேட்கிறார்கள்.
அரோராவின் பெயரை மாத்த வேண்டும் என்று நன் நினைத்தேன். ஆனால் வள் உள்ளே சென்றதும் அங்கே தனக்கு பிடித்ததை தான் செய்வேன் என்றாள். அவர்களோட ஆக்ஷன்ஸ் எனக்கு பயங்கர ஏமாற்றமாக இருக்கிறது, அது எனக்கு புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை.